Sikaram

Sikaram Student Visa, Work Permit, Skilled Migration to UK, Australia, New Zealand, Switzerland, Canada, France, Germany, Italy, Latvia & Malaysia

உள்நாட்டு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விசா ஏற்பாடுகளுடனான Hospitality Management, தமிழக சினிமா வாய்ப்புகள் தரும் FILM & MEDIA Studies, சித்த-ஆயுர்வேத வழிமுறையிலான ஆயுசு 100 பரிபூரண நலவாழ்வு மையம், NorthernHost வடக்கு மாகாண சுற்றுலா சேவைகள்,

15 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மாகாணம் தழுவிய அளவில் மாணவர்களுக்கு உள்நாட்டு/வெளிநாட்டு கல்வி - தொழில் வாய்ப்புக்களை வழ...
07/09/2026

15 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மாகாணம் தழுவிய அளவில் மாணவர்களுக்கு உள்நாட்டு/வெளிநாட்டு கல்வி - தொழில் வாய்ப்புக்களை வழங்கிவரும் சிகரம் நிறுவனம்

📢A/L பரீட்சை முடித்த மாணவர்களின் வெளிநாட்டு கல்வி - தொழில் கனவுகளை நிறைவேற்ற வழங்கும் பலவிதமான தீர்வுகள்!

✅உயர்தரப் பெறுபேற்றுக்காகக் காத்திருக்காமல் O/L பெறுபேறுகளுடனே

🇳🇿 உலகின் Top 1% பல்கலைக்கழகங்களில் ஒன்றான Curtin University ஊடாக அவுஸ்ரேலிய கனவை நிறைவேற்றும் வாய்ப்பு!

🇬🇧 பிரித்தானிய University of Bedfordshire
🇨🇦 கனேடிய Algoma University பட்டக்கல்வி அனுமதிகள்

O/L பெறுபேற்றில் திருப்தி இல்லாதவர்கள்,

🛎️SIKARAM COLLEGE School of Hospitality யின் 🏖️Tourism & 🧑‍🍳Hospitality Management கற்கைநெறி மூலம்,

✈️அவுஸ்ரேலியா🇦🇺, நியூசிலாந்து🇦🇺, மலேசியா🇲🇾, சிங்கப்பூர்🇸🇬, டுபாய்🇦🇪
உயர்கல்வி - தொழில்வாய்ப்புக்கள் பெறும் ஏற்பாடு.

🎥தென்னிந்திய சினிமாத்துறை 🎬வாய்ப்புக்கள், ஊடகத்துறை👨‍💻வாய்ப்புக்கள் தரும் SIKARAM COLLEGE School of Film & Media

✅அடிப்படையிலிருந்து, IELTS வரையில் உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்த
👩‍🏫ENGLISH for Communication

💥2026 A/L பரீட்சையில் எந்தத் துறையில் தோற்றிய மாணவர்களும் 2027இல் கலைத்துறையில் பரீட்சைக்குத் தோற்றி வெற்றிபெற FAST TRACK A/L Arts

நீங்கள் விரும்பிய தெரிவை மேற்கொள்ள இன்றே தொடர்புகொள்ளுங்கள்!

உங்கள் வெளிநாட்டுக் கல்விக் கனவை நிறைவேற்ற அங்கிங்கென எங்கும் அலைந்தது போதும்!👨‍🏫15 வருடங்களுக்கு மேலாக வடக்கு மாகாணம் த...
02/09/2026

உங்கள் வெளிநாட்டுக் கல்விக் கனவை நிறைவேற்ற அங்கிங்கென எங்கும் அலைந்தது போதும்!

👨‍🏫15 வருடங்களுக்கு மேலாக வடக்கு மாகாணம் தழுவிய அளவில் கல்வி - தொழில் - வெளிநாட்டுக் கல்வி - விசா சேவைகளை வழங்கிவரும் சிகரம்,

✈️ இப்போது உங்கள் அவுஸ்ரேலிய, பிரித்தானிய, கனடா கனவுகளை நிறைவேற்ற உன்னத வாய்ப்புக்களை வழங்கத் தொடங்கியிருக்கிறது.

💥உலகளவில் Top 1% Ranking இல் உள்ள அவுஸ்ரேலிய Curtin University

🔥Algoma University, Canada, 🔥St. John University, UK
🔥 University of Queensland, Australia

🧑‍🎓பட்டக்கல்வி வாய்ப்புகளுக்கான அனுமதிகள்,

இப்போது,

🚌யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துக்கு மிக அருகில்,

🏥போதனா வைத்தியசாலைக்கு முன்பாக,

🏢கொமேர்ஷல் வங்கிக்கு அருகில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டக்கல்விப் பிரிவு வளாகத்தில் இயங்கும்

👩‍💼உங்கள் சிகரம் நிறுவனத்திலேயே
பெற்றுக்கொள்ளலாம்🙋‍♂️

🆗O/L பெறுபேறுகளுடனே விண்ணப்பிக்கலாம்

🔥O/L உடன் 4 வருடங்களில் பட்டதாரி ஆகி
விரும்பிய நாட்டில் தொழிலுடன் குடியேறலாம்
🏃‍➡️ உடன் அனுமதிகளுக்கு முந்துங்கள்

077 732 4004

பறக்கும் கமரா ட்றோன் படப்பிடிப்பை லாவகமாகக் கற்றுக்கொடுத்த சிகரம்  # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #...
01/09/2026

பறக்கும் கமரா ட்றோன் படப்பிடிப்பை
லாவகமாகக் கற்றுக்கொடுத்த சிகரம்
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

ஜனநாயகன், ராயன் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் ட்றோன் படப்பிடிப்புச் செய்த ட்றோன்மான் அரவிந்த்குமார் அவர்களிடம் சிகரம் Film & Media பிரிவு நடாத்திய களப்பயிற்சியில் சினிமெற்றிக் ட்றோன் படப்பிடிப்பு நுட்பங்களை பல மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர்.

சிகரம் Film & Media கற்கைநெறி அங்குரார்ப்பனத்தையொட்டி, இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக சிகரம் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சினிமெற்றிக் ட்றோன் பயிற்சி மாணவர்களுக்கு நவீன சினிமாத் தொழில்நுட்பத்தின் புதிய வளர்ச்சி தொடர்பில் முற்றிலும் புதுவித அனுபவங்களை வழங்குவதாக அமைந்திருந்தது.

ஓகஸ்ட் 18 முதல் 21ம் திகதி வரை, யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக, கொமேர்ஷல் வங்கிக்கு அருகில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்பு பிரிவு வளாகத்தில் இயங்கும் சிகரம் நிறுவனம் ஒழுங்குபடுத்திய சினிமற்றிக் ட்றோன் பயிற்சியில்,

யாழ் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கழகம், சென்ஜோன்ஸ் கல்லூரி, சென் பற்ரிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் சிலருடன், யாழ் Aquinas College ஒளிப்பட மற்றும் திரைப்படக் கற்கை மாணவர்கள், துறைசார் செயற்பாட்டாளர்கள் என பலரும் ஆர்வத்துடன் இணைந்து சினிமற்றிக் ட்றோன் படப்பிடிப்புப் பயிற்சிகளைப் பெற்றனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி பட்டக்கல்விப் பிரிவு வளாகத்தின் பின்புறம் அமைந்திருக்கக்கூடிய அழகான திறந்தவெளியில் பலவிதமான ட்றோன்களை பறக்கவிட்டு படப்பிடிப்பு நடத்தும் நுட்பங்களை ட்றோன்மான் அரவிந்த்குமார் ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார்.

கைகளில் ட்றோன்களைப் பிடிக்கவே தயங்கிய மாணவர்களை, அச்சமின்றி அதைக் கையாளவும், இயக்கவும், மேலுயர்த்தவும், லாவகமாகப் படப்பிடிப்புச் செய்யவும், மீண்டும் கைகளிலேயே அதனை இறக்கிப் பிடிக்கவும் என பலவிதமான நுட்பங்களை ட்றோன்மான் அரவிந்த்குமார் மிகப் பொறுமையாக பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்.

ட்றோன் பறக்கவிடல், படப்பிடிப்புச் செய்தல் தொடர்பான சட்ட வரையறைகளை மீறாத வகையில், இலங்கை விமானப்படையின் துறைசார் வல்லுநர்களின் நேரடிக் கண்காணிப்புடன், கட்டுப்பாடான உயரத்தில் ட்றோன்களைப் பறக்கவிட்டு, சினிமெற்றிக் ட்றோன் படப்பிடிப்பு நுட்பங்களை ட்றோன்மான் அரவிந்த்குமார் அவர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

18ம் திகதி மாலை 4 மணிக்கு, இந்தியத் துணைத்தூதுவர் மாண்புமிகு சாய் முரளி அவர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட துணைத்தூதரக கலாசார உத்தியோகத்தர் சங்கரன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாணத்தின் முன்னணி சினிமாத்துறை செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற சிகரம் Film & Media கற்கைநெறி மற்றும் சினிமற்றிக் ட்றோன் களப்பயிற்சி அங்குரார்ப்பன நிகழ்வுடன் ஆரம்பித்த இந்தப் பயிற்சிகள்,

19ம், 20ம் திகதிகளில் முழு நாள் பயிற்சியாகத் தொடர்ந்து, 21ம் திகதி காலை 10 மணிக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் Film & Media கற்கைநெறி அறிமுகத்துடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அவுஸ்ரேலிய பட்டக்கல்வி வாய்ப்பை வழங்கும் Curtin University Colombo மற்றும் அவுஸ்ரேலியா, UK, Canada பட்டக்கல்வி வாய்ப்புக...
26/08/2026

அவுஸ்ரேலிய பட்டக்கல்வி வாய்ப்பை வழங்கும் Curtin University Colombo மற்றும் அவுஸ்ரேலியா, UK, Canada பட்டக்கல்வி வாய்ப்புகளை வழங்கும் SLIIT CITY UNIVERSITY ஆகயவற்றின் பிரதிநிதியாக சிகரம்!
# # # # # #

உலகின் முதல் 1% பல்கலைக்கழகங்களில் ஒன்றான அவுஸ்ரேலிய Curtin University பட்டக்கல்வியை வழங்கும் Curtin Colombo,

மற்றும் அவுஸ்ரேலிய, பிரித்தானிய, கனேடிய பல்கலைக்கழக பட்டக்கல்வி, டிப்ளோமா கற்கைநெறிகளை வழங்கும் SLIIT CITY UNIVERSITY ஆகியவற்றின்,

மாணவர் உள்ளீர்ப்பு பிரதிநிதியாக,

15 வருடங்களுக்கு மேலாக வடக்கு மாகாணம் தழுவிய அளவில், கல்வி, தொழில், வெளிநாட்டுக் கல்வி/விசா சேவைகளை வழங்கி,

தற்போது யாழ் நகரின் மத்தியில், யாழ்ப்பாணக் கல்லூரி பட்டக்கல்விப் பிரிவு வளாகத்தில் இயங்கிவரும் சிகரம் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கையில், Curtin Colombo பிரதம செயற்பாட்டு அதிகாரி உடித் கமகே மற்றும் சிகரம் நிறுவனத்தின் நிறுவுநர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கோடீஸ்வரன் றுஷாங்கன் ஆகியோர், நேற்று, ஓகஸ்ட் 25ம் திகதி கையொப்பமிட்டு, உடன்படிக்கையைப் பரிமாறிக்கொண்டனர்.

கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள Curtin University Colombo பிரதான அலுவலகத்தில் இந்த உத்தியோகபூர்வ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, Bank of Ceylon Merchant Tower இன் 16வது மாடியில் அமைந்துள்ள SLIIT CITY UNIVERSITY இன் நிர்வாக கேட்போர் கூடத்தில் அந்தப் பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகளுடன் சிகரம் நிறுவுநர் றுஷாங்கன், அவர்களுடனான உடன்படிக்கையை இறுதிப்படுத்தினார்.

இதன்மூலம், இத்தனை காலமும் கொழும்பை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வந்த Curtin University Colombo மற்றும் SLIIT CITY UNIVERSITY இன் வெளிநாட்டு பட்டக்கல்வி அனுமதிச் சேவைகளை வடக்கு மாகாண மாணவர்கள்,

யாழ் நகர மத்தியில், பேரூந்து நிலையம், போதனா வைத்தியசாலை என்பவற்றுக்கு எதிரே, கொமேர்ஷல் வங்கிக்கு அருகில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரி பட்டக்கல்விப் பிரிவு வளாகத்தில் இயங்கும் சிகரம் நிறுவனம் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

2009ம் ஆண்டு முதல், வடக்கு மாகாண பொருளாதார மேம்பாட்டுக்காக இளையோரை வலுவூட்டும் வகையில் சிகரம் நிறுவனம் முன்னெடுத்துவரும் கல்வி- தொழில் வழிகாட்டி சேவை, தொழில் ஏற்பாட்டுடனான தொழிற்றிறன் விருத்திப் பயிற்சிகள், உள்நாட்டு/வெளிநாட்டு கல்வி-தொழில்-விசா சேவைகளின் நீட்சியாக இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தினக்குரல் பத்திரிகையில்...ஆசிரியர் வினோஜித் அவர்களுக்கு நன்றி
26/08/2026

யாழ் தினக்குரல் பத்திரிகையில்...

ஆசிரியர் வினோஜித் அவர்களுக்கு நன்றி

24/08/2026

Success does not always begin with academic brilliance. Sometimes, it begins with failure, humility, hard work and the courage to choose a different path.

The remarkable life of Tilak de Zoysa, one of Sri Lanka's respected business leaders, is a powerful example. A member of the distinguished de Soysa family and nephew of legendary businessman and philanthropist Sir Cyril de Zoysa, he went on to become a leading figure in Sri Lanka's automobile industry, chairman of 11 companies, a global humanitarian leader and a diplomat.

Tilak was the fourth son of V. T. de Zoysa, the only brother of Sir Cyril. As children, they affectionately called Sir Cyril "Loku Pappa." Although Sir Cyril was strict, he was deeply affectionate towards his nephews. Tilak remembers him not only as a successful businessman but as a man who dedicated much of his wealth to society. The Kalutara Bodhiya, Colombo YMBA, homes for the elderly and many other institutions reflected his commitment to the country.

Despite growing up in a wealthy and influential family, Tilak never believed that inherited privilege should define him. He often emphasised that whatever he achieved was earned through his own work.

As a student at Royal College, Colombo, Tilak was far more interested in sports than academics. He became the Royal Primary Wrestling Champion and later played cricket and rugby.

He decided not to pursue the conventional university route. Instead, his real university became the plantation sector.

For seven and a half years, he worked in the tea plantations of Maskeliya. He experienced everything from planting and maintaining tea bushes to plucking, weighing, drying and sending tea to auction. More importantly, he dealt directly with workers and difficult labour issues.

Living in an isolated bungalow, sometimes without electricity after 10 p.m., he faced situations that even put his personal safety at risk. But these experiences transformed him. He learned humility, discipline and, above all, the importance of respecting workers.

Before becoming a senior executive, Tilak experienced ordinary working life. In 1966, he began as a clerk at Commercial Engineering Company.

Later, he joined his brother's refrigerator business and worked in sales and after-sales service. By 1971, he had become Sales and Service Manager.

In 1978, his father asked him to return to the family business, Associated Motorways (AMW). The company was facing difficult times, employing around 1,400 people while business remained weak.

Tilak travelled to Japan with his father and began developing relationships with Nissan. His efforts helped strengthen international partnerships and grow the business. He eventually became Deputy Chairman and Managing Director of AMW.

One of his greatest professional achievements was helping introduce CEAT tyres to Sri Lanka. When CEAT's Managing Director visited Sri Lanka, Tilak took him to AMW's tyre-rebuilding facility in Kalutara and then to the Kalutara Bodhiya. During those few hours, he demonstrated not only AMW's business potential but also its history and credibility.

The response was immediate. The CEAT executive told him, "Okay, let's work together." Within two weeks, they travelled to India and signed the agreement. Tilak also played a key role in securing major international brands and agencies including Maruti, Suzuki, Yamaha and Renault.

His career eventually extended far beyond the automobile industry. He served as Chairman of HelpAge Sri Lanka for 13 years and became the first Asian Chairman of HelpAge International in England. He also served as its Global Ambassador.

His humanitarian work became one of the most meaningful parts of his life. During the 2004 tsunami, he was involved in the transparent distribution of millions of pounds in international aid. His integrity earned international trust and recognition. In 2004, he received the prestigious Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon, one of Japan's honours awarded to foreign nationals.

Tilak also served as chairman of companies including Carson Cumberbatch, CG Corp Global's Sri Lankan operations, Associated CEAT, Jetwing Zinc Journey, Dutch Lanka Trailers, Amaya Radisson, Trinity Steel and Wipro International. In total, he chaired 11 companies.

He also served as Chairman of both the Ceylon Chamber of Commerce and the National Chamber of Commerce, a distinction achieved by only a handful of Sri Lankans. He served on numerous corporate boards and was appointed to the Monetary Board of the Central Bank of Sri Lanka. He also served as Consul of Croatia for many years.

Despite these achievements, his management philosophy remains remarkably simple: listen to both sides, remain impartial, take responsibility and give people the freedom to make decisions.

He believes a good leader should build independent people not employees who constantly depend on the boss. And when someone under a leader achieves something valuable, that person should receive the credit.

His philosophy of success is equally simple: "Just do whatever you do properly."

The greatest lesson from his story is that your academic results, family background or early failures do not determine your future.

What matters is what you do with the opportunities life gives you.

Be humble. Work hard. Respect people. Give credit to others. Protect your integrity. And above all, let your work speak for you.

That is the enduring legacy of Tilak de SlZoysa.

AMW After Sales AMW Lubricants - Castrol Distributor Sri Lanka AMW Capital Leasing and Finance PLC AMW Automall

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையில்...ஆசிரியர் வித்தியாதரன் அவர்களுக்கு நன்றி.
24/08/2026

இன்றைய காலைக்கதிர் பத்திரிகையில்...

ஆசிரியர் வித்தியாதரன் அவர்களுக்கு நன்றி.

சினிமா தொழில் துறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பனம்! # # # # # # # # # # # # # # #ஜ...
23/08/2026

சினிமா தொழில் துறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பனம்!
# # # # # # # # # # # # # # #

ஜனநாயகன், ராயன் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் ட்ரோன் படப்பிடிப்புச் செய்த Dronemane அரவிந்த்குமாரின் சினிமற்றிக் ட்ரோன் பயிற்சி மற்றும், யாழ்ப்பாணம், இந்திய சினிமா தொழிற்றுறையினரின் நேரடிப் பங்கேற்புடன் சிகரம் நிறுவனத்தின் Film & Media கற்கைநெறி அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது.

சிகரம் நிறுவனம் தற்சமயம் இயங்கிவரும், யாழ் பேரூந்து நிலையம், வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு வளாக மண்டபத்தில் இந்த அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றது.

சிகரம் Film & Media கற்கை அங்குரார்ப்பனத்தையொட்டி ஓகஸ்ட் 18ம் திகதி முதல் 20ம் திகதிவரை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற Droneman அரவிந்த்குமாரின் ட்ரோன் பயிற்சிகளைத் தொடர்ந்து,

21ம் திகதி வெள்ளிக்கிழமை ட்ரோன் பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வுடன் சிகரம் Film & Media கற்கைநெறி தொடக்கிவைககப்பட்டது.

அந்தோனி திரைப்பட இணை இயக்குநர் சுகிர்தராஜ், 'பகிடியாகக் கதைப்போம்' புகழ் ஜனார்த்தனன், ஏ.கே.கமல் ஸ்ரூடியோ உரிமையாளர் கமல், ஹிமாலயா க்ரியேஷன்ஸ் துவாரகன் உள்ளிட்ட யாழ் திரைத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள் இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்துகொண்டு, ட்ரோன் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்து, சிகரம் Film & Media கற்கைநெறியையும் தொடக்கிவைத்தனர்.

யாழ் பல்கலைக்கழ ஊடகக் கற்கைத்துறை, Aquinas College ஒளிப்பட மற்றும் சினிமா கற்கைப்பிரிவு, யாழ் இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழகம், சென்ஜோன்ஸ் கல்லூரி, சென் பற்ரிக்ஸ் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுடன், துறைசார் செயற்பாட்டாளர்களும் சுமார் 20 பேர் ட்ரோன் பயிற்சி பெற்று சான்றிதழளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிகரம் Film & Media கற்கை பற்றிய அறிமுகமும், மாணவர்கள் - துறைசார் செயற்பாட்டாளர் இடையேயான கலந்துரையாடலும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட திரைப்படத்துறைச் செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக,

ஈழத்தில் பிறந்து தென்னிந்திய சினிமவாக நீளிரா திரைப்படத்தைப் படைத்த இயக்குநர் சோமீதரன், விரைவில் வெளியாகவிருக்கும் போராட்டம் திரைப்பட பணிகளுக்காக இந்தியா சென்றிருந்த யாழ் சினிமாத்துறையைச் சேர்ந்த புத்தி கெட்ட மனிதர்கள் மற்றும் தீப்பந்தம் திரைப்பட புகழ் ராஜ் சிவராஜ், மதீசன் ஆகியோர், அந்தோனி இணை இயக்குநர் ஜெனோசன், வெந்து தணிந்தது காடு திரைப்பட புகழ் மதி சுதா உள்ளிட்ட ஈழத்தின் திரைப்படத்துறை முன்னோடிகள் பலரும் சிகரம் Film & Media கற்கைநெறிக்கான தமது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன், தமது எதிர்கால திரைப்பட முயற்சிகளில் சிகரம் Film & Media மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஈழ சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாத்துறை வாய்ப்புகளை வழங்க்ம இந்தக் கற்கைநெறி அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதால, புதிதாக இணைந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் கீழுள்ள இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

077 732 4004

cinemacourse

Address

464, Hospital Road, Jaffna
Jaffna Town
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

+94777324004

Alerts

Be the first to know and let us send you an email when Sikaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sikaram:

Shortcuts

Share