08/06/2026
🔴⚪🔴2002-வது நாளின் காலைத்தியானம் 09/06/2026 !!!
இந்த காலைவேளையில், "கிறிஸ்து உங்களுக்கு மன்னித்துபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" ….. “REMEMBER THE LORD FORGAVE YOU, SO YOU MUST FORGIVE OTHERS” என்று (COLOSSIANS) கொலோசெயர் 3:13-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
கிறிஸ்து நமது பாவங்களை நிபந்தனையின்றி மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களின் தவறுகளை முழுமையாக மன்னிக்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது.
மன்னிப்புக் கேட்பதும், மன்னிப்புக் கொடுப்பதும் மனிதர்களுக்கு எளிதான காரியம் அல்ல. தவறு செய்ததை அறிந்திருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க பலர் தயங்குகிறார்கள். அதுபோல, தன் தவறை உணர்ந்து வருகின்ற மனிதனை, மன்னித்து ஏற்றுக்கொள்வதும் பலருக்கு கடினமாக இருக்கிறது.
நாம் அனைவரும் தவறு செய்கிறவர்களே. ஆனால் நமது தவறுகளை உணர்ந்து, சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டு சீர்பொருந்திக்கொள்வது நல்ல சாட்சியாகும். அதேபோல், மன்னிப்புக் கேட்பவரை மன்னித்து ஏற்றுக்கொள்வது தேவ அன்பின் வெளிப்பாடாகும்.
மத்தேயு 6:14-ல், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்" என்று ஆண்டவர் போதிக்கிறார்.
எனவே பிரியமானவர்களே, சிலுவையில் தம்மையே தியாகம் செய்து, நம்மை மன்னித்த கிறிஸ்துவைப் போல, நம் இருதயத்திலுள்ள கசப்புகளை அகற்றி, மற்றவர்களின் குற்றங்களை மனதார மன்னிப்போம். மன்னிப்பு மன சமாதானத்தையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் நமக்குக் கொண்டுவரும்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கிறிஸ்துவாகிய நீர் எங்களுக்கு மன்னித்ததுபோல, நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிக்க எங்களுக்கு உதவிசெய்யும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7 - 9967228488.
WhatsApp 74004 72200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India