Dharmapurionline

Dharmapurionline Get the latest offers, coupons and news from Dharmapuri Online. Display add here and get more customer Post your ads get more customer from online

சூர்யாவிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டது பீட்டா அமைப்பு. மேலும், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகவும் நீண்ட விளக்கம் அளித்துள்ளா...
29/01/2017

சூர்யாவிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டது பீட்டா அமைப்பு. மேலும், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகவும் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக் கோரி தமிழகம் முழவதும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுகான தனது ஆதரவு தொடர்பாக நடிகர் சூர்யா, "ஏறுதழுவுதல் என்பது நமது கலாச்சாரத்தோடு, அடையாளத்தோடு சேர்ந்த ஒரு விஷயம். சட்டம் - ஒழுங்கு சேர்ந்து வரலாம். ஆனால், ஜல்லிக்கட்டையே தடை செய்யக் கூடாது" என்று கருத்து தெரிவித்தார்.

சூர்யாவின் இந்தக் கருத்தை பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா, "ஜல்லிக்கட்டு பிரச்சினையை பயன்படுத்தி சூர்யா தனது சி-3 திரைப்படத்துக்கான விளம்பரத்தைத் தேடுவது மலிவான செயலாகும்" என்று விமர்சித்திருந்தார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விமர்சித்த பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி பூரா சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "நீங்கள் இப்போது கூறுவது சரியென்றால் உங்களது ஜல்லிக்கட்டு ஆதரவுக் கருத்துகளை உங்கள் அடுத்த திரைப்படம் ’சிங்கம் 3’ பட வெளியீட்டுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நாங்கள் முழு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அகரம் அறக்கட்டளையை நீங்கள் நடத்தி வருகிறீர்கள் என்பதும் அதன் மூலம் நலிவுற்ற குழந்தைகளுக்கு சேவையாற்றி வருகிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம், நலிவுற்ற குழந்தைகளைப் பாதுகாப்பது போல் நாம் விலங்குகளையும் பாதுகாப்பது அவசியம். இதனால்தான் ஜல்லிக்கட்டு பற்றி நீங்கள் மிகவும் நேர்மையாக ஆதரவுக்கருத்துகளைத் தெரிவித்ததை எங்களால் நம்ப முடியவில்லை. ஜல்லிக்கட்டு மனித, விலங்குகள் உயிர்களை பலிவாங்கும் ஒரு கொடூரமான விளையாட்டு. குறிப்பாக இளைஞர்கள் பலியாகின்றனர், திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் பலியானதும் இதனால்தான்.

நாங்கள் நல்லப் படத்திற்கான விளம்பரங்களை ஆதரிக்கிறோம், ஆனால் வாழும் உயிரிகளுக்கு துன்பம் இழைக்கும் எந்த ஒரு விழாவையும் நாங்கள் ஆராதிக்க முடியாது. நீங்களும் இப்படித்தான் யோசித்திருப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

’சிங்கம்’ படத்தில் நீங்கள் நேர்மையான, கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறீர்கள், எனவே விலங்குகளுக்கு கொடுமை இழப்பதைத் தடுப்பது எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் நடிக்கும் இந்த கதாபாத்திரம் உங்களை எங்கள் நடவடிக்கைகளை பாராட்ட வைக்கும் என்று கருதுகிறோம்" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பூர்வா ஜோஷி பூரா.

14/01/2017
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்...
07/01/2017

கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்கும் தெரியும். 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தனது சித்தியின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹைதராபாத் சென்று தனியே வசித்து வந்த அஞ்சலி சில மாதங்களுக்கு முன் ஒன்று சேர்ந்தார்.

தற்போது தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார்.

இன்னிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவுசெய்துள்ளார்களாம்.

வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்துக்கு!வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள், ஒரு நிமி...
02/11/2016

வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்துக்கு!

வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள், ஒரு நிமிடம் இந்த செய்திக்காக செலவு செய்யவும். உங்களுடைய கல்வி கடனுக்காக மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் கல்வி கடனுக்கு செலுத்தும் வட்டி தொகையை மானியமாக வங்கிக்கு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வி கடன் தொகை மட்டும் திரும்பி செலுத்தினால் போதும்.
இந்த மானியத்தை பெற நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியினை அணுகி உங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா என்பதை விசாரிக்கவும். ஒரு வேளை உங்களுக்கான கடன் தொகையுடன் வட்டி தொகையும் சேர்ந்து இருந்தால் உடனே நீங்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று, உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற வருமான சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம் சான்று பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து, வங்கியில் உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், உங்களுடைய கல்விக் கடனை மட்டும் திரும்பி செலுத்தினால் போதுமானது.
இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் பேசியபோது “பொதுவாக கல்விக் கடன் வழங்கும்போதே வங்கியில் வருமான சான்றிதழை சமர்பித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையிலும் மானியம் வழங்கப்படுவது உண்டு. சில நேரங்களில் நீங்கள் கல்வி கடன் பெற்று நான்கு ஆண்டுகளில் குடும்ப வருமானம் மாறி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்காக மானியத்தை பயன்படுத்துவதற்கு, புதிய படிவத்துடன் புதியதாக வருமான சான்றிதழை பெற்று தர வேண்டி இருக்கும்.

இது வங்கிக்கு வங்கி மாறும் என்பதால் நீங்கள் கல்விக் கடன் பெற்ற வங்கியின் மேலாளரை சந்தித்து விளக்கம் பெற்ற பின்பு தாசில்தாரிடம் சான்று பெற்றுத் தருவது நல்லது. இவ்வாறு பெற்று தரும்போது உங்கள் கல்வி கடனுக்கான வட்டியினை மத்திய அரசு மானியமாக வழங்கும்” என்றார்.

பெரும்பாலும் கல்வி கடன் வாங்கும்போது வங்கிக்கு சென்றிருப்போம். அதன் பின்பு வங்கிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு குறைந்து இருக்கும். கல்வி கடன் பெற்றவர்களுக்கு இன்னொரு முறை வங்கிக்கா என்று யோசிக்க தோன்றும். கூடவே, தாசில்தார் அலுவலகத்தில் எளிதாக கையெழுத்து வாங்க முடியுமா என்ற யோசனையும் உங்களை தாமதப்படுத்தும். ஆனால், முயன்றால் உங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் கல்விக் கடன் பெறாதவராக இருந்தால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு இந்த தகவலைத் தெரியப்படுத்தவும்.

http://www.vikatan.com/news/tamilnadu/71051-kind-attentiion-education-loan-borrowers.art

Price: 590Deal Price: 515 FREE DeliveryYou Save: 75 (13%) Inclusive of all taxes
12/09/2016

Price: 590

Deal Price: 515 FREE Delivery

You Save: 75 (13%) Inclusive of all taxes

32GB Storage Capacity New simple and stylish model with retractable USB connector Hi-Speed USB 2.0 for a convenient transfer of large files Plug'n Play

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின்ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இ...
14/08/2016

உலக அளவில், உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு ஸ்பெயின்

ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக் காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருஷத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக் காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர, உறுப்பு கள் முழுச் செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5,000 ஆயிரம் மட்டுமே. கல்லீரல் 500 பேருக்குக்கூடக் கிடைக்கவில்லை. உறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்ந்து 1994-ம் ஆண்டிலேயே இதற்கெனத் தனிச் சட்டம் இயற்றி, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது மத்திய அரசு. என்றாலும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு எட்டவில்லை.

ஒரு தனியார் செய்தி நிறுவனம், உறுப்பு தானம் குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ள மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, அநேகம் பேர் உடல் தானத்தையும் உறுப்பு தானத்தையும் குழப்பிக்கொள்கின்றனர். இரண்டாவது, கண் மற்றும் சிறுநீரகத்தைத் தானமாகத் தரலாம் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது. உடலின் பல உறுப்புகளைத் தர முடியும் என்பது தெரியவில்லை. மூன்றாவது, உறுப்பு தானத்தை யார், எங்கு, எப்படிச் செய்வது என்பது முக்கால்வாசிப் பேருக்குத் தெரியவில்லை.

Address

Dharmapuri Town
Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapurionline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharmapurionline:

Share

Category