Veera Pengal Munnetra Sangam

Veera Pengal Munnetra Sangam We are a union of women workers from Chennai. Beyond our daily work, we have dreams, struggles, and stories that deserve to be heard.

We’re here to share the truth of our journey, the moments that often go unseen but shape who we are.

21/08/2026

VPMS ன் பயணம், அதன் தாக்கம் மற்றும் பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களை முன்னேற்றுவதில் அதன் முக்கியத்துவம் குறித்து UNDP Deputy Resident Representative Isabelle Tschan அவர்களின் பார்வைகள்.

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் குரலுக்கும் வலிமை சேர்க்கும் VPMS-ன் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“UNDP Deputy Resident Representative Isabelle Tschan shares her views on VPMS, its journey, impact, and the importance of supporting women auto drivers.

A journey towards greater opportunities, economic empowerment, and stronger voices for women in transport.”

20/08/2026

VPMS உறுப்பினர்கள் மற்றும் UNDP குழுவினருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில், VPMS கூட்டுறவு அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான வலுவான கூட்டுறவை உருவாக்கி, புதிய வாய்ப்புகளையும் ஆதரவையும் உருவாக்கும் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

VPMS members met with UNDP to discuss the next steps for strengthening and building their cooperative.

The journey towards creating stronger opportunities and support for women auto drivers continues.

07/08/2026
03/08/2026

முதலுதவி அறிவு என்பது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான திறன்.

VPMS-இன் அபிராமி அவர்கள் முதலுதவி பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற தனது அனுபவத்தையும், அவசரநிலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட இந்தப் பயிற்சி எப்படி உதவியது என்பதையும் பகிர்கிறார்.

முதலுதவி கற்றுக்கொள்வது ஒரு திறன் மட்டுமல்ல ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பும் ஆகும்.

Knowledge can save lives, and first aid is a skill everyone should have.

Abirami from VPMS shares her experience of participating in the First Aid Training Programme and how it has given her the confidence to respond during emergencies.

Learning first aid is more than a skill it’s a responsibility that can make a real difference.

30/07/2026

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் தனது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் உரிமை கொண்டவர்.

பல பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளில் தொல்லை, அவமரியாதை மற்றும் தேவையற்ற நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த வீடியோவில், VPMS-இன் சந்திரா அவர்கள் அந்த அனுபவங்களையும், பெண்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்ற அனைவரின் ஆதரவும் மரியாதையும் ஏன் அவசியம் என்பதையும் பகிர்கிறார்.

Every woman deserves to feel safe while earning a living.

Many women auto drivers face harassment, disrespect, and unwanted behaviour on the road. In this reel, Chandra from VPMS speaks about these challenges and why respect and support for women drivers matter.

Let’s create safer roads where every woman can work with confidence and dignity.

24/07/2026

ஒரு நிமிட விழிப்புணர்வு… ஒரு உயிரைக் காப்பாற்றலாம்.

VPMS உறுப்பினர்களுக்காக ALERT Foundation நடத்திய முதலுதவி பயிற்சிப் பட்டறையில், பயிற்சியாளர் திரு. நீலகண்டன் அவர்கள் முதலுதவியின் அவசியத்தையும், அவசர நேரங்களில் சரியான உதவி செய்வதின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் முதலுதவி தெரிந்திருந்தால், சாலையில் பல உயிர்களுக்கு நம்பிக்கையாக இருக்க முடியும்.

உதவ தயாராக இருப்போம். உயிர்களை காப்போம்.

Every second matters. Every auto driver can be a first responder.

Our VPMS members took part in a First Aid Workshop conducted by the ALERT Foundation, where Mr. Nilakandan shared valuable insights on how basic first aid knowledge can save lives before medical help arrives.

A small act. A big impact. Because helping someone in need starts with being prepared.

23/07/2026

எங்கள் VPMS குடும்பத்துடன் இணைந்து தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் என்றும் உங்களைத் தொடர வாழ்த்துகிறோம்.

Celebrating not just a birthday, but the incredible person who inspires us every day.
Happy Birthday, Dhanalakshmi! Wishing you endless happiness, good health, and continued success. Thank you for being a part of the VPMS family.

16/07/2026

ஒரு ஆட்டோ ஓட்டுநரின் பயணத்தில் வரும் சவால்கள் பல அதில் ஒன்று டோயிங் பிரச்சனை. இந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை பகிர்கிறோம்.

The journey of an auto driver comes with many challenges and towing is one of them. In Episode 2 of our VPMS Reel Series, we share important information every auto driver should know.

10/07/2026

இந்த வீடியோ எந்த ஒரு பிராண்டையும் அல்லது தயாரிப்பையும் விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை. பெண்களுக்கு மாதவிடாய் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு பராமரிப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தவும் மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது.

அறிவு பகிர்வதே எங்கள் நோக்கம்.

We've received many messages asking where to buy the products featured in our Menstrual Care Kit.

This video is not a product promotion or endorsement. It was created to raise awareness about menstrual health and introduce women to the different menstrual care options available. The products shown are part of a menstrual kit distributed as part of our awareness initiative.

Our goal is to encourage informed choices and conversations around menstrual health.

09/07/2026

வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் அன்பு உறுப்பினரான தெய்வநாயகியை இன்று அன்புடன் நினைவுகூர்கிறோம்.

அவரின் புன்னகை, துணிச்சல், அன்பு எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.

Today, we remember Deivanayaki, a cherished member of Veera Pengal Munnetra Sangam. Her presence, strength, and kindness will always remain in our hearts. We honor her memory and extend our heartfelt condolences to her family, friends, and fellow members.

Forever remembered

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veera Pengal Munnetra Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share