AJR Resource

AJR Resource AJR RESOURCE offer effective permanent and/or temporary employment solutions.

We Provide Property Management Services, Rental Management, Property Renovations & Repairs.

01/03/2026

Use your Uber account to order delivery from Bendale Wings & Breakfast (3264 Lawrence Avenue East) in Toronto. Browse the menu, view popular items, and track your order.

Today, on Remembrance Day, we honour the courage of all who have given their lives for freedom and peace—soldiers in uni...
11/12/2025

Today, on Remembrance Day, we honour the courage of all who have given their lives for freedom and peace—soldiers in uniform, peacekeepers, and civilians who stood against tyranny in every corner of the world.
We remember Canadian veterans who served in distant wars and on home soil.
We remember the Tamil people of Sri Lanka, whose untold sacrifices in the struggle for justice and dignity must never be forgotten.
We remember every soul lost to conflict, from Flanders Fields to the shores of Mullivaikkal.
Their dreams of a safer, fairer world live on in us.
In Flanders fields the poppies blow
Between the crosses, row on row…
Lest we forget. 🌺🇨🇦

அடமானக் கடன் வட்டி வீதங்கள் எப்போது குறைவடையும் என்பதே  பலரிடமும் உள்ள கேள்வியாகின்றது. உண்மையில் அடமானக் கடன் வட்டி வீத...
11/19/2023

அடமானக் கடன் வட்டி வீதங்கள் எப்போது குறைவடையும் என்பதே பலரிடமும் உள்ள கேள்வியாகின்றது.

உண்மையில் அடமானக் கடன் வட்டி வீதம் என்பது பல காரணிகளோடு தொடர்பு பட்டிருக்கின்றது.

கனேடிய மத்திய வங்கியின் நள்ளிரவு வட்டி வீதம் மிக முக்கியமானது அதனோடு நிதிப்பதிரங்கள் மற்றமும் அதன் நிதி ஈட்டமும் கூட வங்கி வட்டி வீதத்தில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது.

01.நிதிப் பத்திரங்கள் ( 𝐁𝐨𝐧𝐝𝐬 ) என்றால் என்ன ?
***********************************************************
அரசாங்கம் அல்லது நிறுவனங்கள் தமக்கு தேவையான நிதியினை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டுவதற்கான ஒரு பாதுகாப்பான பொறி முறை தான் நிதிப் பத்திரங்கள் எனப்படுகின்றன.

அரசாங்கம் தனது தேவைகளை பூரத்தி செய்வதற்கான நிதியினை இவ்வாறான பத்திரங்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றது.

நாம் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமாக அரசாங்கத்தின் செலவீனங்கள் அனைத்தையும் சமாளிக் கமுடியாது என்பதால் அரசாங்கம் பொதுமக்களிடம் இருந்து கடன் பெறும் ஒரு வழிமுறை தான் பத்திரங்கள் எனப்படுகின்றன.

இது மிகப் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றது.

அரசாங்கம் அல்லது குறிப்பிட்ட நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு குறிப்பிட்ட தொகையினை முதலீட்டு வருமானாக வழங்கும்.

நிதிப்பத்திரத்தின் கொள்முதல் விலை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

முதலாவது இந்த நிதிப்பத்திரத்தை வழங்கம் தரப்பின் கடன் பெறும், தகுதி ( Credit Worthiness ) சாதாரண மக்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் போது எமது கடன் பெறுதிக்கு ( Credit Score ) ஒப்பானது.

இரண்டாவது நாட்டின் பொருளாதார நிலையும் பணவீக்கமும் மூன்றாவதாக மத்திய வங்கியினால் மேற்கொள்ளபடும் வட்டி வீத அதிகரிப்பு

இந்த மூன்று முக்கிய விடயங்களின் அடிப்படையில் கடன்பத்திரத்தின் விலை தீர்மானிக்கப்படுகின்றது.

02. நிதி ஈட்டம் ( 𝙔𝙞𝙚𝙡𝙙) என்றால் என்ன ?
*************************************************
நிதிப்பத்திரம் ஒன்றின் மூலமாக உங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் வருமானத்தை நிதிப் பத்திர ஈட்டம் என்று கூறலாம்.

நீங்கள் நிதிப்பத்திரங்களை கொள்வனவு செய்வதன் மூலம் மேற்கொள்ளும் முதலீட்டினால் உங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் வருமானம்.

உதாரணமாக நீங்கள் 1000 டொலர் பெறுமதியான ஒரு நிதிப் பத்திரத்தை கொள்வனவு செய்யும் போது அதன் மூலம் ஒரு வருடத்திற்கு 50 டொலர் வருமானம் உங்களுககு கிடைக்கும் பட்சத்தில் அதன் நிதி ஈட்டம் 5 சதவீதம் என்று குறிப்பிடப்படுகின்றது.

03.நிதிப்பத்திரத்தின் விலையும் அதன் ஈட்டத்திற்கும் இடையிலான தொடர்பு
***************************************************************
நிதி ஈட்டம் அதிகரிக்கும் போது நிதிப்பத்திரத்தின் விலைகள் குறைவடையும்.

உதாரணமாக நீங்கள் 5 சதவீத நிதி ஈட்டத்திற்கு ஒரு நிதிப்பத்திரத்தை கொள்வனவு செய்துள்ளீர்கள் ஆனால் தற்போது 7 சதவீத நிதி ஈட்டத்திற்கு நிதிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டால் பலரும் அதனை கொள்வனவு செய்வதற்கே விரும்புவார்கள் காரணம் அதன் மூலம் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

இவ்வாறான நிலையில் 5 சதவீதத்திற்கு கொள்வனவு செய்த நிதிப்பத்திரத்தை அவர்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இது ஒரு வகையில் முதலீட்டாளர்களுக்கு இழப்பாக கருதப்படும்


நிதிப்பத்திரங்களுக்கும் அடமானக் கடன் வட்டி வீதங்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன ?
**************************************************************
நிதிப்பத்திரங்களுக்கான ஈட்டமும் வங்கி வட்டிவீதமும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பினை கொண்டிருக்கின்றன.

நிதிப்பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் ஈட்டம் அதிகரிக்கும் போது வங்கி வட்டி வீதம் அதிகரிக்கும் நிதி ஈட்டம் குறைவடையும் போது வட்டி வீதம் குறைவடையும்.

மறுபுறம் குறைந்த செலவில் நிதிப்பத்தரங்களை விற்பனை செய்ய முடிந்தால் அதற்கு ஏற்றவயில் தமது வட்டி வீதங்களை வங்கிகள் குறைத்துக் கொள்ளும்.

குறிப்பாக 5 வருடங்களுக்கான நிதிப்பத்திரங்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்படும் நிதி ஈட்டம் எவ்வாறான மறர்றத்தை காண்பிக்கின்றது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

அது தொடர்ந்தும் அதிகரித்தால் வங்கி வட்டிவீதங்கள் அதிகரிக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடியும்.

அதேவேளை 5 வருடங்களுக்கான நிதிப்பத்திரங்களுக்கான உறுதியளிக்கப்புடும் நிதி ஈட்டம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்தால் வங்கி வட்டி வீதங்கள் குறைவடையும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியும்.

வங்கிகளை பொறுத்தவரை தமது நிலையான வட்டி வீதங்களை மிக விரைவாக அதிகரிக்கும் அதேவேளை அதனை குறைப்பதற்கு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் நிலையினை நாம் அவதானிக்க முடியும்.

எனவே எப்போது வங்கிகள் தமது வட்டி வீதங்களை மாற்றும் என்பதை அனுமானிப்பது மிகக் கடினமானது.

03/02/2022

ETAXCAN is an accounting and tax services firm based in Toronto, providing a wide range of services including Personal and corporate taxation, accounting and...

02/26/2022
01/21/2022

Address

1504 Markham Road, 2nd Floor
Toronto, ON
M1B2V9

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+14163625200

Alerts

Be the first to know and let us send you an email when AJR Resource posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AJR Resource:

Share